இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன், 5வது டி20 போட்டியிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடந்து முடிந்த நான்கு போட்டிகளிலும் இந்திய அணி 4-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன், சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி நிரந்தர இடம்பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனால் அவர் இலங்கைக்கு எதிரான போட்டியில் 6(2) ரன்கள், நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8(5) மற்றும் 2(5) என தொடர்ந்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.
நியூசிலாந்து அணிக்கெதிராக நான்காவது போட்டியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், 2வது ஓவரை வீசிக்கொண்டிருந்த ஸ்காட் குகலீஜ்னின் 1.3வது பந்தில் மிட்செல் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதேபோல ஐந்தாவது போட்டியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், அதேபோல 2வது ஓவரை வீசிக்கொண்டிருந்த ஸ்காட் குகலீஜ்னின் 1.3வது பந்தில் மிட்செல் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.