மனைவியின் தலையை கையில் வைத்துக் கொண்டு காவல்நிலையத்தினை நோக்கி ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் நபர் ஒருவர் நடந்து சென்றுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பரபங்கி மாவட்டம் பஹதுர்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் அகிலேஷ் ராவத்(30). இவரது மனைவி ரஜனி(25). குறித்த தம்பதிகளுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்து உடல் நிலை சரியில்லாமல் இறந்துள்ளது.
அடிக்கடி கோபப்படும் அகிலேஷ் மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டே இருப்பாராம். சம்பவத்தன்றும் வாக்குவாதமாக ஆரம்பித்த சண்டை இறுதியில் மனைவியின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு சென்றுள்ளது.
மனைவி சரமாரியாக அடித்து வெளியே தள்ளியும் கோபம் அடங்காத அகிலேஷ் கத்தியால் மனைவியைக் குத்தி, கழுத்தையும் துண்டாக வெட்டியுள்ளார். பின்பு மனைவியின் தலையை எடுத்துக்கொண்டு சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்திற்கு நடந்துள்ளார்.
இதனை அவதானித்த மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, கமலேஷை கைது செய்து, அவரது கையில் இருந்த தலையை பறிமுதல் செய்வதற்கு சென்ற தருணத்தில், திடீரென தேசிய கீதம் பாடியும், பாரத் மாதா கீ ஜே என்றும் முழக்கமிட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் பின்பு தலை மற்றும் தெருவில் விழுந்த கிடந்த முண்டத்தை பறிமுதல் செய்து அகிலேஷிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.