சீனாவில் பயங்கர பாதிப்பினை ஏற்படுத்தி தற்போது உலக நாடுகளை பெரும் மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது கொரொனா வைரஸ். இந்நிலையில் சீனாவை அடுத்து அமெரிக்காவில்இன்ஃபுளூயன்ஸா ஏ வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த வைரஸால் அமெரிக்காவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இன்ஃபுளூயன்ஸா ஏ’ என அறியப்படும் இந்த வைரஸ் ஹெச்1என்1 வகையைச் சேர்ந்தது. `கொரோனா மற்றும் இன்ஃபுளூயன்ஸா ஏ’ ஆகிய இரு வைரஸ்களுக்கும் அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதால் மக்கள் அதிகளவில் பயத்துடன் காணப்படுகின்றனர்.
மருத்துவமனைக்கு வருபவர்களில் 5.7% சதவிகிதம் பேருக்கு இன்ஃபுளூயன்ஸா வைரஸுக்கான அறிகுறி இருப்பதாக அமெரிக்காவின் இன்ஃபுளூயன்ஸா கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் இந்த வைரஸ் அதிகமாகப் பரவி வருவதாகவும் கண்காணிப்புக் குழு கூறுகிறது.
ஆனால் நேற்றைய தினம் வரை கொரோனா வைரஸால் அமெரிக்காவில் 7 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.