அம்பாறை, பொத்துவில் பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்த சுவீடன் நாட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின்பேரில் 18 வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம்(1) இரவு இடம்பெற்றுள்ளது.
6 மாதங்களுக்கு முன்னர் 31 வயதான இந்த பெண் தமது இலங்கைக்கு வந்து உள்ளூரில் விருந்தகம் ஒன்றை நடத்தி வரும் தமது ஆண் நண்பருடன் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஆண் நண்பர் இரவு உணவு எடுப்பதற்காக வெளியில் சென்ற வேளையில் சந்தேகநபர் பலாத்காரமாக விருந்தகத்தில் புகுந்து கத்தி முனையில் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆண் நண்பர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், அம்பாறை பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.