வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்ற குடும்பப் பெண் ஒருவர் மயக்கமுற்று வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
அல்வாய் வடக்கு, பருத்தித்துறையைச் சேர்ந்த 46 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான இ.அழகேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சைக்காக, அல்வாய் பகுதியில் இருந்து, வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக இன்று காலை சென்றுள்ளார்.
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக காத்திருந்த வேளை திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ளார். இவ்வாறு வீழ்ந்தவரை தூக்கி வைத்தியசாலையில் சிகிச்சையளித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறப்புத் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டார்.
விசாரணைகளின் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்தார்.