நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதவுடன் பலமான அரசை தோற்றுவிப்பதே தற்போதைய பிரதான எதிர்பார்ப்பாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவட்டத்தின் கிரிபாவ என்ற பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எமது பலமான அரசு தோற்றம் பெறும்.
ஓர் இனத்துக்காக மாத்திரம் எமது அரசு செயற்படவில்லை. அனைத்து மக்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்.
நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு அபிவிருத்திப் பணிகளை அரசு முன்னெடுக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் கட்சி தலைமைத்துவத்துக்காக முரண்பட்டுக்கொள்வது அரசியல் வரலாற்றில் இடம்பெறாத ஒரு சம்பவமாகும்.
நான் கட்சித் தலைமைத்துவம் ஏதும் இல்லாமலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகொண்டேன் என்று கூறியுள்ளார்.