உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பராபங்கி மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 26 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் சிறுமியின் குடும்ப உறவினரின் டிரைவர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று, சிறுமியின் உறவினர் ஒருவர் அவரது குடும்பத்தோடு சிறுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். சிறுமி அவரது வீட்டின் பின்னால் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த ட்ரைவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், சிறுமிக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர், அதன் பின்னர், அந்த டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயன்றார், ஆனால் கிராமவாசிகளால் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதை தொடர்ந்து, போலீசார் அந்த டிரைவர் மீது இந்திய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



















