சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளராக ரஞ்சித்மத்துமபண்டார தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஐக்கிய தேசிய கட்சியின்செயற்குழு ஒப்புதல் வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவலில் பொதுச்செயலாளர் ஐக்கியதேசியக் கட்சியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களும் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்தாலோசித்தே இறுதிப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளரை தெரிவு செய்யும் அதிகாரம் செயற்குழுவால் கடந்தவாரம் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையிலேயே அவர் ரஞ்சித் மத்துமபண்டாரவை தெரிவுசெய்துள்ளார்.எனினும் ரணில் தரப்பு நவின் திசாநாயக்க அல்லது ராஜித சேனாரத்ன ஆகியோரின்பெயர்களை செயலாளர் நிலைக்கு பரிந்துரைத்துள்ளது.


















