இலங்கை பொன்னான யுகத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 72ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுதந்திரம் கிடைத்த பின்னரான கடந்த 72 ஆண்டுகளை மீட்டிப்பார்க்க வேண்டியுள்ளது.
அவ்வப்போது ஏற்பட்ட கடுமையான சவால்களுக்கு மத்தியிலும் சர்வஜன வாக்குரிமை அடிப்படையிலான பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமை நாட்டில் பாதுகாக்கப்பட்டது.
அரசியல் காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதார முன்னேற்றத்தை நாட்டிற்கு மீண்டும் பெற்றுக்கொடுப்பதே தமக்கு முன்பாக உள்ள சவால்.
இலங்கை பொன்னான யுகத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதை சுதந்திர தினத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.