இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றுள்ளார்.
அண்மைக்காலமாக அரசியல் ரீதியாக ஓரங்கட்டலுக்கு உட்படுத்தப்பட்ட சந்திரிக்கா இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டமை குறித்து பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கட்சியின் கொள்கைக்கு முரண்பாடாக செயற்பட்டார் என்று குற்றச்சாட்டின் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் சந்திரிக்கா நீக்கப்பட்டிருந்தார்.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















