அபிமானமிகு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு சுதந்திர தினமான இன்று உறுதி பூண வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்று இலங்கை வாழ் மக்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இன, மத, குல, சாதி பேதமின்றி ஒன்றாக இணைந்து இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணித்துள்ள அனைவருக்கும் தேசத்தில் கௌரவம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


















