லண்டனில் பெண்ணை கொலை செய்து சடலத்துடன் வாரக்கணக்கில் வசித்து வந்த கொடூரனுக்கு 12 ஆண்டுகள், ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு லண்டனில் உள்ள Battersea என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் Antoinette Donegan என்ற பெண் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதம் 7ஆம் திகதி Antoinette வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் படுக்கையறை ஜன்னலை உடைத்து கொண்டு உள்ளே போன போது Antoinetteவின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. இது தொடர்பாக அதே அடுக்குமாடி வீட்டில் தங்கியிருந்த Kristian Smith என்பவரை பொலிசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் தான் Antoinette-ஐ அடித்து கொன்றுவிட்டு சடலத்துடன் வாரக்கணக்கில் தங்கியிருந்தது தெரியவந்தது.
மேலும் எதுவுமே நடக்காதது போல எப்போதும் போல வெளியில் சென்று வந்திருக்கிறார் Antoinette.
இதன்பின்னர் Kristian Smith மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர் குற்றவாளி என கடந்த மாதம் 27ஆம் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் Kristian Smith-க்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி அவருக்கு 12 ஆண்டுகள், ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதோடு கொலை செய்த பெண்ணின் வங்கி கார்டை திருடி சென்று அந்த பணத்தில் போதை மருந்துகள் வாங்கிய குற்றமும் Kristian Smith மீது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தண்டனை விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.