மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுவரையிலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே தாக்கிக் கொண்டிருந்த இந்நோய் தற்போது 30 வயது பெண்களையும் பதம்பார்க்க தொடங்கியுள்ளது.
இதற்கு காரணம்
சிறுவயதிலேயே பெண்கள் பூப்படைதல்
தாமதமான திருமணங்கள்
குழந்தை பேரின்மைக்காக தொடர் சிகிச்சை முறைகள்
மெனோபஸ் காலகட்டம்
உறவினர்களில், குறிப்பாக தாய் அல்லது சகோதரிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால் அந்தக் குடும்பத்துப் பெண்ணுக்கு புற்றுநோய் வர 10 சதவிகித வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
இதுதவிர
உடல்பருமன்
துரித உணவுகள் அதிகம் உட்கொள்வது
உடற்பயிற்சியின்மை
புகை மற்றும் மதுப்பழக்கம்
ரத்த அழுத்தம், சர்க்கரைநோய்
சுயபரிசோதனை
25 வயது முதல் மாதம் ஒருமுறையாவது பெண்கள் தங்களது மார்புகளை சுயமாகவே பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
இதற்கு மாதவிலக்கு முடிந்த 7 முதல் 10 நாட்களுக்குள் கண்ணாடி முன் நின்று இரு மார்பகங்களுக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும்.
இதன்போது மார்பில் கட்டி, மார்பக தோலில் சுருக்கம், ரத்தகசிவு போன்றவை உட்பட வேற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை பார்ப்பது அவசியம்.
மேம்மோகிராம்
எக்ஸ்ரே போன்ற இந்த சிகிச்சையை 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்து கொள்ளலாம்.
துல்லியமாக 80 சதவிகித அளவுக்கு புற்றுநோய் இருப்பதை காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது சுலபம்.
இந்த டெஸ்டிலும் சந்தேகம் இருப்பின் மார்பக ஸ்கேனிங், FNAC என்ற நீர்பரிசோதனை செய்து நோய் இருப்பது உறுதி செய்யப்படும்.
பிரபல நடிகையான கௌதமி தொடர் பரிசோதனை மற்றும் மேம்மோகிராம் சிகிச்சையின் மூலமே தனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்ததாகவும், தொடக்க நிலையிலேயே இருந்ததால் அதை வெல்ல முடிந்தது என கூறியிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
“புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே முடங்கி விடாமல் அதை எதிர்த்து போராடி வெற்றி பெற வேண்டும்” என்கிறார்.
இதுமட்டுமின்றி Life Winner என்ற தொண்டு நிறுவனம் மூலம் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார் .