தென்னிலங்கையில் கடந்த வாரம் 192 kg போதைப்பொருள் சிக்கியபோது அங்கு புதிதாக எந்த ஒரு சோதனைச்சாவடியேனும் அமைக்கப்படவுமில்லை .
அதோடு எந்த வாகனமும் எங்கேயும் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவதாகவுமில்லை .
ஆனால் வடமாகாணத்தில் ஆங்காங்கே அதுவும் கடற்பரப்பிலேதான் கஞ்சா மாட்டியுள்ளது .
இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டு கடந்த மூன்று வாரங்களுக்குள் வடக்கில் இருபதுக்கு மேற்பட்ட ராணுவ சோதனைச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் .
குறிப்பாக தீவகத்தில் நான்கு இடங்களில் இவ்வாறு சோதனை மேற்கொள்ளப்படுகின்றது .
என்ன வேடிக்கையென்றால் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவோ அல்லது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனோ இதுவரையேனும் வாய் திறக்கவில்லை .
மீன்குஞ்சும் , இறால் குஞ்சும் விட்டுப் சிறுபிள்ளைத்தனமாக படம்காட்டுகின்ற அமைச்சர் இது தொடர்பில் ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.