கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் உள்ள சீன மற்றும் தென்கொரியா சுற்றுலா பயணிகளை நாட்டு மக்கள் நடத்தும் ஒருவித செயற்பாடு கவலை அளிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட ஆரம்பத்தில் இருந்தே இலங்கையில் சீன நாட்டவர்கள் மற்றும் கொரிய நாட்டவர்களை சிலர் அண்டாதவர்களாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இவ்வாறான செயற்பாடுகளை மக்கள் களைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதுடன், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sri Lankan hospitality is known around the world. As our friendly nation of China is taking control of the Corona virus, it is unfortunate that some East Asians in Sri Lanka were unwelcome in public places just because of their appearance.
— Karu Jayasuriya (@KaruOnline) February 3, 2020


















