பிராந்திய பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை என்பவற்றுடன் இருதரப்பு உறவை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 72வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகள் பல்வேறு துறைகளிலும் மக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
இது பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை என்பவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


















