விமல் வீரவன்ச ஒரு நவீன மனநோயாளி எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கட்டைக்காடு கோவில் பகுதி மக்களுடனான சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன் போது கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் தமிழர்களை கொடூர வெறியுடனே பார்க்கின்றனர்.
தமிழர்களின் இரத்தங்களைக் குடிக்க காத்துக் கொண்டிருப்பது போன்று அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
அமைச்சர் வீமல் வீரவன்ச ஒரு நவீன மனநோயாளி எனவும், இந்த அரசு தமிழர்களை அடக்கி ஆளவும் ஒடுக்கி ஆளவும் தொடர்ந்து முயற்சிக்கிறது என குறிப்பிட்டார்.
சிங்கள தலைவர்கள் கடந்த கால படிப்பினைகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை. எமது உரிமைகளைத் தர மறுத்த போதுதான் தமிழர்கள் போராடினார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.




















