நாட்டில் அதிகரித்திருந்த மரக்கறிகளின் விலை அடுத்த 10 நாட்களில் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறுவடை காலம் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த எதிர்வுகூரப்பட்டுள்ளது.
அகில இலங்கை பொருளாதார நிலைய மற்றும் கொழும்பு மெனிங் சந்தை தொழிற்சங்கம் ஆகியன இதனை தெரிவித்துள்ளன.
நாட்டின் மரக்கறிகளின் விலை அதிகரிப்புக்கு யாரையும் குற்றம் சுமத்த முடியாது.
இதுவரை காலமும் மலைநாட்டு மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவியது.
இதில் மழை காரணமாக லீக்ஸ் மற்றும் கரட் ஆகியன பாதிக்கப்பட்டமை காரணமாக அந்த விநியோகம் சந்தைக்கு கிடைக்கவில்லை.
எனினும் அடுத்த 10 நாட்களில் மரக்கறிகளின் நிரம்பல் சந்தைக்கு கிடைக்கும் நிலையில் அதன் விலைகள் குறையும் என்று இந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலையில் கொழும்பில் மரக்கறிகளின் விலைப்பட்டியல் (கிலோகிராம்)
போஞ்சி – 305 ரூபா
கரட் – 430 ரூபா
கோவா – 125 ரூபா
தக்காளி – 375 ரூபா
கத்தரி – 83 ரூபா
பூசணிக்காய் – 165 ரூபா
எனினும் இவை கொழும்பின் ஏனைய இடங்களில் இதனை விட அதிக விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


















