நடிகை சனம் ஷெட்டி மற்றும் தர்ஷனின் காதல் முறிவும் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.
விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் சனம் ஷெட்டிக்கு அறிமுகமானார் தர்ஷன். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்.
சனம் ஷெட்டியின் பெற்றோர் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவே, தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பாக சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.
View this post on Instagram
சனம் ஷெட்டி தனக்கு ஏராளமான உதவிகளை செய்திருப்பதாக தர்ஷனே தனது செய்தியாளர் சந்திப்பில் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் சனம் ஷெட்டிக்கு தனது முன்னாள் காதலருடன் தொடர்பு இருப்பதாக கூறி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருகிறார் தர்ஷன்.
தர்ஷன் சொல்வது போல் தங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்று சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் கூறியும் தர்ஷன் சமாதானம் ஆனதாக தெரியவில்லை.
இந்நிலையில் சனம் சிம்புவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ஏற்கனனே பல காதல் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில் சனம் இப்படி புகைப்படம் எடுப்பது சரியா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.




















