கர்ப்பம் அடைந்திருப்பதை ஆசையுடன் கூறிய மனைவியை அவருடைய கணவன் கழுத்தை அறுத்துக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பிரேசிலில் அரங்கேறியுள்ளது.
பிரேசில் நாட்டை சேர்ந்த பிரான்சின் டோஸ் சாண்டோஸ் (22) என்பவர் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வந்தார். இவர் மார்செலோ அராஜோ (21) என்கிற இளைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்த பிரான்சின், ஆசையாக தன்னுடைய கணவனிடம் கூறி மகிழ்ந்துள்ளார்.
அப்போது கிறிஸ்துமஸ் விருந்துக்கான திட்டங்களைப் பற்றி இருவரும் விவாதித்துக்கொண்டிருந்துள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவரை சமாதானப்படுத்துவதற்காக பிரான்சின் படுக்கையறைக்குப் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் ஆத்திரமாக இருந்த மார்செலோ, படுக்கையறையில் இருந்தபோது திடீரென பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த மார்செலோ, தனக்கு ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை இருக்கும் சமயத்தில் கர்பமடைந்திருப்பதாக மனைவி கூறியது தனக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியாகவும், அதன் காரணமாகவே கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.


















