நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு 80 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியானது இன்று ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதின்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 347 ரன்களை குவித்தது.
348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதால் அந்த அணி, 48.1 பந்திலே இலக்கை அடைந்து வெற்றியடைந்தது.
இந்த போட்டியின்போது விராட்கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலாக 4 ஓவர்களை வீசியதற்காக போட்டி கட்டணத்தில் 80% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்-பீல்ட் நடுவர்கள் ஷான் ஹெய்க் மற்றும் லாங்டன் ருசெர், மூன்றாவது நடுவர் புரூஸ் ஆக்ஸன்போர்டு மற்றும் நான்காவது நடுவர் கிறிஸ் பிரவுன் ஆகியோர் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
கோஹ்லி குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, முன்மொழியப்பட்ட அனுமதியை ஏற்றுக்கொண்டதால் முறையான விசாரணை தேவையில்லை.
முன்னதாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 மற்றும் ஐந்தாவது போட்டியில் இந்திய அணி மெதுவாக பந்துவீசியதற்காக ஐசிசி அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.