நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது அசாதாரண பீல்டிங் திறமை காட்டினார்.
ஹாமில்டன் மைதானத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
துடுப்பாட்டத்தில் அசத்திய இந்திய அணித்தலைவர் கோஹ்லி வழக்கம் போல் பீல்டிங்கிலும் அசத்தினார்.
நியூசிலாந்து இன்னிங்ஸின் போது 28-வது ஓவரை இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா வீசினார். 28-வது ஒவரின் நான்காவது பந்தை பும்ரா வீச பந்தை அருகிலேயே தட்டி விட்ட டெய்லர் ஒரு ஓட்டம் ஓட முயன்றார்.
எதிர்திசையில் இருந்த வேகமாக ஓடி வந்த ஹென்றி நிக்கோல்ஸ், கோஹ்லி பந்தை பிடித்ததை கண்டவுடன் டைவ் அடித்தார்.
எனினும், பந்தை பிடித்த கோஹ்லியும் பறந்த படி ஸ்டம்பை மீது பந்தை வீசினார். ஹென்றி கோட்டிற்குள் வருவதற்கு முன் பந்து ஸ்டம்பை தாக்கியது. அசாதாரண திறமையால் ஹென்றி விக்கெட்டை கைப்பற்றிய கோஹ்லி ஆக்ரோஷமாக கொண்டாடினார்.
சிறப்பாக விளையாடி வந்த ஹென்றி 78 ஓட்டங்களில் நடையை கட்டினார். முதல் ஒரு நாள் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்கள் குவித்த நியூசிலாந்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரோஸ் டெய்லர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.