மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த வேதனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பினை வழங்க அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு தொழிற்சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன. இவ்வாறான நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வேதனத்தை வழங்குவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இதற்கு பல தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை என செய்திகள் வெளியாகியதாக அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,
சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இதற்கு இணங்க அவர்கள் மறுத்தால் அவற்றினை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.