இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயாக முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்தது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்து வீச தீர்மானித்தது. இதில் இந்திய அணி 50 ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 347 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் வெற்றி இலக்காக நிர்ணையித்தது இந்திய அணி.
பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 6விக்கெட் இழப்பிற்கு 348 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இது குறித்து பேசிய இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, “நியூசிலாந்து அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்களை கட்டுப்படுத்த 348 ஓட்டங்கள் இலக்கு போதுமானது என்று நினைத்தோம்.
நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாகப் பந்து வீசினோம். டாம் தான் எங்களிடமிருந்து வெற்றியைப் பறித்துச் சென்றுவிட்டார். மிடில் ஓவர்களில் எங்களால் ராஸ்டெய்லர் மற்றும் டாம் இருவரையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
எங்கள் பீல்டிங் சிறப்பாகத்தான் இருந்தது. ஒருவாய்ப்பை தவறவிட்டு விட்டோம். இன்னும் முன்னேற்றம் காண்பது அவசியம். அந்த வாய்ப்பை மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
எங்களைவிட எதிரணியினர் சிறப்பாக துடுப்பாட்டம் செய்தனர். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள்தான்.
எங்கள் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இனிவரும் போட்டிகளிலும் அது தொடரும் என நம்புகிறேன்.
ஸ்ரேயாஸ் சதம் அற்புதம். கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்றார்.