பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இந்தியா செல்லவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிரதமர் அங்கு செல்லவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர், இந்திய ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் விஜயத்தின் போது சாரநாத், புத்தகயா மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மத வழிப்பாட்டுத் தலங்களுக்கும் பிரதமர் செல்லவுள்ளதாகவும் பிரதமர் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.