இந்தியாவின் உள்ளுர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி 2019-20ல் சித்தார்த் கவுல் ஆந்திராவுக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்து அசத்தியுள்ளார்.
ரஞ்சி டிராபில் ஆந்திர அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் அணியில் விளையாடி சித்தார்த் கவுல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
39வது ஓவரை வீசிய கவுல், ஆந்திர வீரர்கள் கே.வி.சசிகாந்த், தசரி ஸ்வரூப், எஸ் ஆஷிஷ் ஆகியோரை அடுத்தடுத்த பந்து வீச்சில் வெளியேற்றினார்.
https://twitter.com/BCCIdomestic/status/1224684470025850881
ரஞ்சி டிராபி தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி மூன்று போட்டிகளில் வென்று இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. மற்ற இரண்டு போட்டிகளும் சமனில் முடிந்தன.