இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்து மிரட்டிய நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் ஹாமில்டன் மைதானம் என் படுக்கையறையில் இருக்கும் பெட் போன்றது என்று கூறியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி நிர்ணயித்த 348 ஓட்டங்களை நியூசிலாந்து அணி அசால்ட்டாக எட்டிப் பிடித்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் சீனியர் வீரரான ராஸ் டெய்லர் 84 பந்துகளில் 109 ஓட்டங்கள் குவித்தார். போட்டி முடிந்த பின்பு டெய்லர் கூறுகையில், இந்த சம்மர், மற்ற ஆண்டுகளை விட மிகசிறப்பாக உள்ளது.
இந்திய அணியை 350 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது என்றே கூறுவேன். டாம் லதாமின் அதிரடி ஆட்டம் என் மீதான அழுத்தத்தை குறைத்தது.
ஹாமில்டன் மைதானம் எனது படுக்கறையில் இருக்கும் பெட்டில் உறங்குவது போன்றது என்று சக வீரர்களிடம் அடிக்கடி கூறுவேன் என்று தெரிவித்தார். இதன் மூலம் அவர் ஹாமில்டன் மைதானம் என்னுடைய கோட்டை என்பதை மறைமுகமாக டெய்லர் கூறியுள்ளதாக அவரது ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.