பிரபல இயக்குனரின் மனைவியை வர்ணித்து ட்வீட் போட்ட பார்த்திபனை நெட்டிசன்கள் கண்ட மேனிக்கு திட்டியும், கலாய்த்தும் வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பார்த்திபன். கடந்த வருடத்தில், விஸ்வாசம், பேட்டை, கைதி , அசுரன் என யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு மக்கள் மனதை வென்று ஹிட் அடித்தது. அதற்கான விருதுகளை கொடுத்து கவுரவித்து விகடன் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு விருது கொடுக்கவில்லை. ஆனால், ஸ்பெஷல் மென்ஷன் என்று ஒரு ஆறுதல் விருதை பார்த்திபனுக்கு வழங்கினார்கள். அதை வேண்டாம் என்று அங்கேயே வைத்துவிட்டு அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.
இந்நிலையில், இவர் எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக எதையாவது பேசி கொண்டே இருப்பார். பிறகு வாங்கும் விருதுகள் வேண்டாம் என்று அங்கேயே வைத்துவிடுவார் அதன் பின் தனக்கு எந்த விருதும் கொடுக்கவில்லை விருதே வேண்டாம் டிவிட்டரில் முழக்கமிடுவார்.
அப்படி தான் சமீபத்தில் குஷ்பூவின் ரவி வர்மாவின் ஓவியம் ஒன்றை பதிவிட்டு தட்டில் பழங்களும்- உ தட்டில் தட்டுப்படும் புன்னகையும் சுவை என வர்ணித்துள்ளார். இதெல்லாம் இப்போ தேவையா ? என்று இதனை பார்த்த நெட்டிசன்கள் பார்த்து சார் கலாய்ப்பது மட்டுமில்லாமல் பல ஃபோட்டோ கமென்ட்களை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.