உலக சுகாதார நிறுவனத்தின் செயற்குழுவின் துணைத் தலைவராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறும் அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அவர் களுபோவில மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் இயக்குநராக பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.