தற்போதைய அரசாங்கம் தான் எண்ணிய அளவுக்கு கூடாத அரசாங்கம் அல்ல, எனினும் அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் வருந்துகின்றனர் என முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சின் செயலாளர் திறமையானவர். ஆனால் திறமையான அதிகாரிகள் சிலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். எமது அரசாங்கமும் செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்த நடவடிக்கை எடுத்தது.
நாங்கள் இந்த ஆண்டு ஜனவரியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை 208 சத வீதத்தினால் அதிகரிக்க இருந்தோம். 2015 ஆம் ஆண்டு கட்டணங்கள் செலுத்தும் தேவை இருந்திருக்காவிட்டால் எங்களால் கண்டி அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணித்து முடித்திருக்க முடியும்.
நாங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பொறுப்பேற்ற போது பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்தது.
நான்கு ஆண்டுகளின் பின்னர் அதனை சாதாரண நிலைமைக்கு கொண்டு வர முடிந்தது. தற்போது மீண்டும் பொருளாதாரத்தை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் மங்கள குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மங்கள, ஆர்ப்பாட்டகாரர்கள் எல்லை மீறி சென்றால் தண்ணீர் தாரை தாக்குதல் நடத்த வேண்டும். ஆர்ப்பாட்டம் இடம் என்று பெயர் பலகை வைப்பதால் பயனில்லை எனக் கூறியுள்ளார்.