இலங்கை முழுவதும் உள்ள சில வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் மூன்று நோயாளிகளும், குருணாகல் வைத்தியசாலையில் இரண்டு பேரும், கண்டி வைத்தியசாலையில் நான்கு பேரும், நீர்கொழும்பு வைத்தியசாலையில் இரண்டு பேரும், ராகமை, கம்பஹா,பதுளை, யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளில் தலா ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனப் பிரஜைகள் அதிகமாக காணப்படும் கொழும்பு, தெஹிவளை, இரத்மலானை பிரதேசங்களில் சுகாதார அதிகாரி அலுவலகங்கள் ஊடாக அவர்களை கண்காணித்து வருவதாகவும் அனில் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.