சாமி ஐயா என்றழைக்கப்படும் எழுத்தாளரும் நடிகருமான முல்லை யேசுதாசன் அவர்கள் காலமானார்.
இவர் குறும் திரைப்பட இயக்குனரும் நடிகரும் எழுத்தாளரும் எமது CAPITAL தொலைக்காட்சியின் பணியாளருமாவார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டினை சேர்ந்த முதுபெரும் கலைஞரான முல்லை யேசுதாசன், 1990 ஆண்டில் இந்தியாவுக்கு அகதியாக சென்றதுடன், அங்கு திரைப்பட துறையில் ஆர்வம் கொண்டவராக திரைப்படங்கள் உருவாக்கப்படுவதை கற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் மீண்டும் 1991 ஆம் ஆண்டு தாயகத்துக்கு திரும்பிய அவர் திரைப்படம் எடுக்கும் ஆவலில் இயக்குநர் தாசனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
முதல் முதல் செவ்வரத்தம் பூ, எதிர்காலம் கனவல்ல பேன்ற குறும்படங்களை இவர் இயக்கி இருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4.3o மணியளவில் மாரடைப்பால் அவர் மரணமடைதுள்ளார்.
இந்நிலையில் இவரது மரணம் முல்லை மக்களுக்கு மட்டுமன்றி நம் தமிழினத்திற்கே பெரும் இழப்பாகும்.