தமிழகத்தில் 2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (48) கட்டிட தொழிலாளி. இவருடைய இரண்டாவது மனைவிக்கு 7 வயது மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2016-ல் இரண்டு பெண் குழந்தைகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக இவரின் இரண்டாவது மனைவி மகளிர் பொலிசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்தனர். மகளிர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஈரோடு மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். இதில் அவர் கூறியிருப்பதாவது, பாதிக்கப்பட்ட 2 பெண் குழந்தைகளுக்கும் நிவாரண நிதியாக தமிழக அரசு தலா 2 லட்சம் வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார்.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது குற்றங்கள் நிருபிக்கப்பட்டதால் தலா 20 வருடம் ஏககாலத்தில் மொத்தம் 40 வருடம் சிறை தண்டனை வழங்கியும் மேலும் தலா 5,000 வீதம் மொத்தம் 10,000 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.