கண்டி, திகனயில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெனிக்ஹின்ன பகுதியில் வைத்து இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் கெப் ரக வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.