தர்ஷனை நீ எல்லாம் ஒரு ஆம்பளையா என்று சனம் கேள்வி கேட்கும் ஆடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சிலர் தர்ஷனுக்கு ஆதரவாகவும் சிலர் சனத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷனும் நடிகை சனம் ஷெட்டியும் காதலித்து வருகின்றனர் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தெரியவந்தது.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த விஷயம் அண்மையில் சனம் ஷெட்டி, தர்ஷன் குறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த போது தெரியவந்தது.
நிச்சயதார்த்தம் நடைபெற்ற போட்டோக்களை வெளியிட்ட சனம் ஷெட்டி, தான் நடிகை என்பதால் தன்னை திருமணம் செய்ய தர்ஷன் மறுப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இனிமேல் சனம் ஷெட்டியை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று தர்ஷனும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தற்போது தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி குறித்த பிரச்சனையே பெரும் பேச்சாக உள்ளது. இந்நிலையில் இருவரும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மேலும் சர்ரச்சையை ஏற்படுத்தியுள்ளது.



















