ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கோரிக்கையை சுதந்திரக் கட்சியிடம் விடுத்துள்ளார்.
சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் புகைப்படங்களை தமது பிரசாரங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். இன்னும் ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளில் அணி மாறுவோர், பொதுஜன பெரமுனவின் தலைவர்களது புகைப்படங்களை பயன்படுத்தி அரசியலில் ஈடுபடக் கூடாது எனவும் தாரக பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.



















