இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி நரக வேதனையுடனும் கண்ணீருடனும் வாழ்ந்து வருகிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் மகேஸ்வரி என்ற 7 வயது சிறுமியே அபூர்வ வியாதி காரணமாக நரக வேதனை அனுபவித்து வருகிறார்.
உடம்பில் தோல் பகுதி கல்லாக மாறும் ஒரு அபூர்வ வியாதிக்கு மகேஸ்வரி இரையாகியுள்ளார்.
கை, கால்கள் மட்டுமின்றி உடம்பின் பெரும்பகுதி கல்லாக மாறியுள்ளது. இதனால் சிறுமி மகேஸ்வரிக்கு உட்காரவோ நடக்கவோ முடியாத சூழல்.
இந்த வியாதிக்கு போதுமான சிகிச்சை இல்லை என்பது மகேஸ்வரியின் வாழ்க்கையை மேலும் கடினமாக மாற்றியுள்ளது.
கிராமத்தில் இந்த வியாதிக்குரிய சிகிச்சை இல்லை என்பதால் நகரப்பகுதியில் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் அந்த சிகிச்சையால் எந்த மாறுதலும் இல்லை என்பது மட்டுமல்ல, இங்குள்ள மருத்துவர்களால் அந்த நோய் தொடர்பில் போதிய சிகிச்சை அளிக்கவும் முடியவில்லை.
ஒரு வயது முதல் மகேஸ்வரிக்கு இந்த அபூர்வ நோய் பாதிப்பு இருந்துள்ளதாக பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.
உடம்பில் ஒரு பகுதியில் மட்டும் உருவான இந்த நோய் பின்னர் உடல் முழுவதும் வியாபித்ததாக தெரிவிக்கின்றனர்.