உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று முன்னணி பிரித்தானிய விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவது குறித்த கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தவறவிடப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் மட்டும் கொரோனா வியாதியால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 722 ஐ எட்டியுள்ளது.
வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 86 பேர் இறந்துள்ளனர், மேலும் 34,400 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் மூன்று பேர் உட்பட 27 நாடுகளில் மொத்தம் 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன, மேலும் சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனாவால் ஒருவர் இறந்துள்ளதுள்ளார்.
ஆனால் கொரோனா வியாதியானது மிக விரைவாக பல நாடுகளுக்கும் பரவுவதை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர், அதனுடன் இரண்டு வார கால கண்காணிப்பு காலம் மற்றும் சோதனை முறைகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றுடன் இந்த நோயின் உண்மையான தாக்கத்தை கண்காணிக்க கடினமாக இருப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால் கொரோனா தொடர்பில் சீனா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் இதுவரை வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ தகவல்கள் அனைத்தும் இறுதியானது அல்ல எனவும் விஞ்ஞானிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில், தற்போதைய சூழலில் நாள் ஒன்றுக்கு 100 பேரை மட்டுமே உரிய முறைப்படி சோதனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஒரு வார காலத்தில் இது 1,000 பேர் என்ற எண்ணிக்கையாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்போது, குறைவான மனித சக்தி காரணமாக அவை அனைத்தையும் உறுதிப்படுத்துவது மிகவும் கடினம் என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள், கொரோனா தொடர்பில் உண்மையான மற்றும் உறுதியான தகவலுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்கின்றனர்.