தாய்லாந்தில் ராணுவ வீரர் ஒருவர் எந்திரத் துப்பாக்கியால் அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாகச் சுட்டதில் இதுவரை 20 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 30 பேர் படுகாயத்துடன் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்கள் எங்கும் சிதறிக் கிடப்பதால் பலி எண்ணிக்கை தொடர்பில் உறுதியான தகவல் வெளிவர தாமதமாகலாம் என கூறப்படுகிறது.
தாய்லாந்தின் நகோன் ராட்சாசிமா நகரில் துப்பாக்கியால் சுட்டவர் ராணுவ மேஜர் ஜக்ராபந்த் தோமா என்று அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆனால் அவரை இன்னும் அதிகாரிகளால் கைது செய்ய முடியவில்லை என்பது மட்டுமின்றி, அவர் எங்கிருக்கிறார் என்ற உறுதியான தகவலும் இல்லை என கூறப்படுகிறது.
கோரட் என்று அழைக்கப்படும் நகோன் ராட்சாசிமாவிலுள்ள டெர்மினல் 21 வணிக வளாகத்தை அதிகாரிகள் கொலையாளியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கையில் முடக்கியுள்ளனர்.
துருப்புக்களும் காவல்துறையினரும் கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளனர், மேலும் துப்பாக்கிச் சூடு நடந்ததாக செய்திகள் வந்துள்ளன.
தற்போது சுற்றிவளைக்கப்பட்ட வணிக வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டனர்,
ஆனால் கட்டிடத்தில் இன்னும் டசின் கணக்கானவர்கள் இருக்கக்கூடும் என பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் ஜெனரல் Kongcheep Tantravanich தெரிவித்துள்ளார்.
இதனிடையே அந்த கொலையாளியின் தாயார் வணிக வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டு, தாக்குதல் முயற்சியை விட்டுவிடும்படி அவரை வற்புறுத்த முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் Kongcheep Tantravanich நிருபர்களிடம் கூறுகையில்,
ராணுவ முகாமிலிருந்து எந்திரத் துப்பாக்கியைத் திருடிய மேஜர் ஜக்ராபந்த் தோமர், அங்கிருந்து புறப்படும் முன் ஒரு அதிகாரியைக் கொலை செய்துள்ளார்.
அதன்பின் ராணுவத்துக்குச் சொந்தமான காரைத் திருடிக் கொண்டு சென்ற தோமர், பவுத்த கோயிலிலும், அதைத் தொடர்ந்து வணிக வளாகத்திலும் புகுந்து துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.
இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். முதல் கட்ட தகவலில் 20 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த கொலைவெறித் தாக்குதலை முன்னெடுக்கும் முன் தோமர் தனது பேஸ்புக் பக்கத்தில் நான் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்த வேண்டுமா எனக்கேட்டுள்ளார். எதற்காக இப்படிச் செய்தார் எனத் தெரியவில்லை என Kongcheep Tantravanich தெரிவித்துள்ளார்.