தாய்லாந்தில் வணிக வளாகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
தாய்லாந்தின் நக்கோன் ராட்சாசிமா மாகாணத்தில் உள்ள டெர்மினல் 21 வணிக வளாகத்தில், ஜகபந்த் தோம்மா என்கிற இராணுவ மேஜர் பொதுமக்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முன்பு அவர் தனது கட்டளை அதிகாரியையும் மற்ற இரண்டு வீரர்களையும் தனது தளத்திலேயே சுட்டுக் கொன்றுவிட்டு காரில் தப்பியதாக பாங்காக் போஸ்ட் தெரிவித்துள்ளது.
பாங்காக்கிலிருந்து வடகிழக்கில் 155 மைல் தொலைவில் உள்ள கோராட்டில் உள்ள டெர்மினல் 21 வணிக வளாகத்தை நோக்கி அவர் சென்றபோது, தோமா சாலையோர பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
EXCLUSIVE: Video shows Sgt. Jakkrapanth Thomma inside Terminal 21 shopping mall in Nakhon Ratchasiman during his shooting rampage that killed at least 12 people. Latest info indicates he's holding 16 people as hostages. #กราดยิงโคราช https://t.co/1qWp0y3VQy pic.twitter.com/y8pqfzw0yw
— Khaosod English (@KhaosodEnglish) February 8, 2020
இந்த சம்பவத்தில் ’17 இறப்புகள், 14 பேர் காயமடைந்தனர் ‘என்று பாங்காக்கின் எரவன் மையத்தின் பெயரிடப்படாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது மருத்துவமனை தகவல்களைத் தொகுக்கும் நாடு தழுவிய அவசர சேவைகளுக்கான அனுப்பும் மையம் ஆகும்.
"Hanuman" police commandos arrive in Korat city after a 40-minute helicopter ride from Bangkok to assist in an operation to kill or capture a gunman who murdered at least 12 people in a shooting rampage. #กราดยิงโคราช #Thailand https://t.co/1qWp0y3VQy pic.twitter.com/LZKaa0OMEI
— Khaosod English (@KhaosodEnglish) February 8, 2020
‘அவர் ஏன் இதைச் செய்தார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் பைத்தியம் பிடித்ததாகத் தெரிகிறது ‘என்று பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கொங்க்சீப் தந்திரவனிட் கூறியுள்ளார்.
அவர் தற்போது வளாகத்திற்குள் பொதுமக்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனால் பொலிஸார் சுற்றிவளைத்து நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகின்றனர்.