யுத்த காலத்தில் இழந்தவற்றை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தான் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டார்கள் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காரைநகர் கலாநிதி விளையாட்டுக்கழகத்தில் விசேட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதியினை இன்று திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
யுத்த காலத்தில் இழந்தவற்றை நாம் கடந்த நல்லாட்சி அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம்.
இப்பொழுது வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை பல்வேறுபட்ட விளையாட்டுக் கழகங்கள் பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மைதான புனரமைப்பதற்கான நிதியினை வழங்கி இருக்கின்றோம்.
இனிவரும் காலங்களிலும் அவ்வாறான உதவிகளை நாங்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.