ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணி குறித்த இறுதி முடிவு நாளை சிரிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியில் தொடர்ச்சியாக நிலவி விரும் பல நெருக்கடிகளை தீர்க்க இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமையும் என்று கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையான அங்கத்தவர்களின் கருத்தாகும், இல்லையெனில் அது கட்சிக்கு மிகவும் ஆபத்தானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்தின் தோல்வி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நேரம் இதுவாகும், தொடர்ந்து நடந்து வரும் உட்பூசல் அத்தகைய நோக்கத்திற்கு சேவை செய்வதற்கு தடையாக உள்ளது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தை விமர்சிக்க ஊடகங்கள் முன் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள மோதல்கள் காரணமாக சாத்தியப்படவில்லை.
எனவே தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் மோதல்கள் தொடரக்கூடாது என்று கட்சியின் தலைவரையும், எதிர்க்கட்சித் தலைவரையும் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.