சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு போராடி வரும் நிலையில், சிலர் அதை பரபரப்பும் நோக்கில் மோசமான செயலில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. பெப்ரவரி 9ம் திகதி வரை 910 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டுமே அதிகபட்சமாக 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே சமயம் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை சுமார் 40,553 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 3,324 பேர் குணமடைந்துள்ளனர்.
வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அறிகுறி இருப்பதாக சந்தேகிப்பவர்களை நோய் தடுப்பு காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா அறிகுறி இருக்கும் மக்கள், அதை மற்றவர்களுக்கு பரப்பும் நோக்கதோடு மோசமான செயல்களில் ஈடுபடும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
லிப்டில் உள்ள பொத்தான் மீது எச்சில் துப்புவதும், உணவில் எச்சில் துப்பி வழங்குவதும் என அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
https://twitter.com/NonghuaNews/status/1226699618441924608
தற்போதும் கொரோன அறிகுறி இருக்கும் முதியவர் ஒருவர், லிப்டின் பொத்தான்கள் மீது எச்சில் தடவும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர வைத்துள்ளது. இச்செயலில் ஈடுபடுவர்கள் பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள் என பலர் விமர்சித்துள்ளனர்.