குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு இன்று கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மன்னாரில் உள்ள முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் வீட்டை சோதனையிட்ட பொலிஸார் அவருக்கு சொந்தமான ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆவணங்களில் மன்னார் பிரதேசத்தில் கொள்வனவு செய்த காணிகள், வீடு உட்பட பல சொத்துக்கள் அடங்கிய ஆவணங்கள் அடங்குவதாக கூறப்படுகிறது.
இதனை தவிர றிசார்ட் பதியூதீன் அமைச்சராக பதவி வகித்த போது சதோச நிறுவனத்தின் ஊடாக மேற்கொண்ட வர்த்தகம் தொடர்பாக தகவல்கள் அடங்கிய ஆவணங்களும் இதில் இருப்பதாக பேசப்படுகிறது.