ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, 72ஆவது சுதந்திர தினத்தில் நடந்துகொண்ட விதம் தொடர்பில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற இராணு அதிகாரியொருவர், தன்னால் பெற்றுக்கொண்ட வெற்றிச்சின்னங்களை, அதிகாரமளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மட்டுமே, அச்சின்னங்களை அணியமுடியும் என்றார்.
இராணுவ உத்தியோகபூர்வ சின்னத்தை அந்த சீருடையிலேயே அணியவேண்டும். அவற்றை சாதாரண ஆடைகளில் அணியமுடியாது.
பீசா சாப்பிடும் கடைக்கு போவதைப்போலவோ அல்லது அரை கை சட்டையை அணிந்துகொண்டோ, அந்த சின்னங்களை அணியமுடியாது என்றும் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.