எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த தோற்றத்தில் வந்தாலும் அதனை தோற்கடிக்க வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாதுக்கை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி வேறு பெயரில் தேர்தலில் போட்டியிட்டாலும் அதனை மிகவும் விளங்கி புரிந்துக்கொண்டு தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
கடந்த அரசாங்கம் பணத்தை செலவு செய்து முடிந்த வரையறையை நிறைவேற்றியுள்ளது. அதனை மாற்ற விசேட சட்டமூலம் கொண்டு வரப்பட வேண்டும்.
பணத்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் குறை நிரப்பு சட்டமூலம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளனர்.
இவற்றுக்கு மத்தியலும் ஜனாதிபதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக இளைய தலைமுறையினர் மற்றும் வர்ததகர்கள் தலைத்தூக்க கூடிய பொருளாதாரத்தின் அடிப்படையிலான அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.