எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானமாக கொண்டு சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்கப்பட உள்ள அரசியல் கூட்டணியை தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்வதற்கான நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான ஆவணங்கள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசிய சக்தி என கூட்டணிக்கு பெயரிடப்பட்டுள்ளதுடன், தேர்தல் சின்னமாக இதயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மஞ்சள் நிறத்தினால் இதயமே இந்த முன்னணியின் சின்னமாக கோரப்பட்டுள்ளது.
இந்த முன்னணி ஐக்கிய தேசியக்கட்சி உட்பட்ட பல கட்சிகளை தம்முடன் இணைத்துக்கொள்ளவுள்ளது.
கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனினும் இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரது அனுமதி கிடைக்கவில்லை.