இணையம் ஊடாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சூழலை பன்படுத்தி கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் உள்ள பிரபல ஆண் மற்றும் பெண் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுடைய சமூக வலைத்தளக் கணக்குகளுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
அதாவது மாணவர்களுக்கு தன்மை ஒரு பெண்ணாக சமூக வலைதள கணக்கின் ஊடாக அறிமுகம் படுத்திக்கொண்டுள்ளதுடன் மாணவிகளுக்கு தன்னை ஆணாக அறிமுகம் செய்துக்கொண்டுள்ளார்.
குறித்த இளைஞன் 3 வருட காலத்திற்கு அதிகமாக இணையம் தொடர்பிலான தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
முகநூல் , இன்ஸ்டாகிராம்,வாட்சப் மற்றும் ஸ்நேப்சட் ஆகிய சமூக வலைத்தளங்கள் ஊடாகவே குறித்த சந்தேக நபர் மாணவ மாணவிகளை தொடர்புக்கொண்டுள்ளார்.
இதன் பின்னர் சந்தேக நபர் பல மாணவ மாணவிகளுடன் தொடர்புளை வளர்த்துள்ளார். அத்துடன் நிர்வாண புகைப்படங்களை அனுப்பியும் பெற்றும் உள்ளார்.
அதன் பின்னர் அவர்களை அச்சுறுத்தி நிர்வாண படங்களையும் வீடியோக்களையும் பெற்றுக்கொண்டு அவற்றை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆபாச இணையத்தளங்களுக்கு விற்றுள்ளார்.
இதன்மூலம் பெறும்பணத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவோர் வேறொரு நபரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தியே கையடக்க தொலைப்பேசிகளுக்கான இணைப்பு அட்டைகள் (சிம் காட்) பெற்றுக்கொள்கின்றனர்.
இதன் ஊடாக மோசடிகளுக்கு தேவையான தொடர்புகளையும் இணைய சூழலையும் உருவாக்கிக்கொள்கின்றனர்.
சிம் காட்களை வேறு பெயர்களில் உள்ள தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பெற்றுக்கொள்வதால் உண்மையான குற்றவாளிகளை இனங்காண்பது கடினமாக உள்ளது.
இதை மோசடியாளர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.
எனவே இது குறித்து மாணவ மாணவிகள் மற்றும் இளைய சமூகத்தினர் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
தமது அடையாள அட்டையை எந்த சந்தர்ப்பத்திலும் இன்னொருவரின் பயன்பாட்டுக்கு வழங்க கூடாது.
இவ்வாறு வழங்கும் பட்சத்தில் பல மோசடிகளுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் பயன்படுத்த கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.