கிளிநொச்சி – கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது ஆட்சி மாற்றத்தின் பின்னர் தற்போதைய நிலைமைகள், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிரதேச சபையின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேற்படி கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், சபை உறுப்பினர்கள், சபையின் செயலாளர் கா.சண்முகதாசன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ந.பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.