இஸ்ரேலில் உள்ள Ben Gurion பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இருவர் அதிநவீன ரோபோ ஒன்றினை அறிமுகம் செய்துள்ளனர்.
Tal Kislassi மற்றும் David Zarrouk என்பவர்களே இதனை உருவாக்கியுள்ளனர்.
இந்த ரோபோவானது படிகள் மற்றும் உயரமான இடங்கள் என்பவற்றில் இலாவகமாக ஏறக்கூடியதாக இருக்கின்றது.
இச் செயற்பாட்டிற்கு ரோபோவின் உடல் அமைப்பை மாற்றிக்கொள்ளும் இயல்பு மிகவும் உதவியாக இருக்கின்றது.
மனிதர்கள் நுழைவதற்கு சிரமமான இடங்களில் மிகவும் இலகுவாக சென்று பணியாற்றக்கூடிய வகையில் இதனை மேலும் மேம்படுத்த முடியும் என குறித்த ரோபோவினை வடிவமைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.